/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
போலி ஆவணம் தயாரித்து நிலம் விற்க முயற்சி: 5 பேர் கைது
/
போலி ஆவணம் தயாரித்து நிலம் விற்க முயற்சி: 5 பேர் கைது
போலி ஆவணம் தயாரித்து நிலம் விற்க முயற்சி: 5 பேர் கைது
போலி ஆவணம் தயாரித்து நிலம் விற்க முயற்சி: 5 பேர் கைது
ADDED : ஜூலை 19, 2011 12:38 AM
திருப்பூர் : போலி ஆவணம் தயாரித்து ஆறு ஏக்கர் நிலத்தை விற்க முயன்ற ஐந்து பேரை, போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி பாரதி நகரை சேர்ந்தவர் சின்னசாமி மகன் சுப்பையா (48).
இவர் திருப்பூர் விஜயாபுரத்தில் நிலம் வாங்க முடிவு செய்து, அப்பகுதியில் உள்ள பேச்சிமுத்து (51) என்பவரது ஆறு ஏக்கர் நிலத்தை பார்த்துள்ளார்; இடம் பிடித்து போனதால் நிலத்தை வாங்கி கொள்வதாக கூறியுள்ளார். அதற்கான ஆவணங்களை பேச்சிமுத்து அவரது நண்பர் நான்கு பேருடன் சேர்ந்து தயார் செய்துள்ளார்.
முன்னதாக சுப்பையா, தான் வாங்க உள்ள நிலம் குறித்து பட்டா, சிட்டா, அடங்கல் குறித்து 'வில்லங்க ' விவரங்களை பெற்றுள்ளார். அதில் ஏற்கனவே குறிப்பிட்ட ஆறு ஏக்கர் நிலம் மற்றொருவருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது. இதையடுத்து, சுப்பையா திருப்பூர் எஸ்.பி. பாலகிருஷ்ணனிடம் புகார் அளித்தார். ரூரல் போலீஸ் ஸ்டேஷனில் வழக்குபதிவு செய்யப்பட்டது. போலி ஆவணம் காட்டி நிலத்தை விற்க முயற்சித்த, பேச்சிமுத்து (51), இதே நிலத்தை ஏற்கனவே வாங்கிய அண்ணாத்துரை (42) இவர்களது கூட்டாளிகள் கோகுலகண்ணன் (30), வெங்கடேஷ் (37), தங்கராஜ் (40) ஆகிய ஐந்து பேரையும் நேற்று போலீசார் கைது செய்தனர்.