ADDED : ஜன 05, 2024 01:33 AM

அனுப்பர்பாளையம்;அனுப்பர்பாளையம், 15 வேலம்பாளையம், ஆத்துப்பாளையம், அங்கேரி பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் 300க்கும் மேற்பட்ட பாத்திர உற்பத்தி பட்டறைகள் உள்ளன.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, 50க்கும் மேற்பட்ட பாத்திர உற்பத்தி பட்டறைகளில் பொங்கல் பானை உற்பத்தி செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இங்கு, தமிழ் டேக் ஷா, நாட்டு தவளை, களி பானை, கோதாவரி குண்டு, உருளி, வாணா சட்டி உள்ளிட்ட பொங்கல் பானைகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன.
பொங்கல் பண்டிகைக்கு மிக குறைந்த நாட்களே உள்ளதால், உற்பத்தி செய்யப்பட்ட பானைகளை பாலிஷ் செய்து ஆர்டர் பெற்ற மாவட்டங்களுக்கு அனுப்பும் பணியில் தொழிலாளர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
'ஆப்பிள்' பானை
சுதாகர் என்பவருடைய பாத்திர பட்டறையில் 'ஆப்பிள்' என்ற புதிய வகை பொங்கல் பானையை அறிமுகம் செய்து உற்பத்தி செய்துள்ளனர். இது, மண் பானை வடிவில் கவரும் வகையில் வடிவமைத்து உள்ளனர். இந்த வகை பானை திருநெல்வேலி உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது.