ADDED : மார் 14, 2026 06:14 AM
அ நிறம் | அளவு
அனுப்பர்பாளையம்: மார்ச் 14-: திருப்பூர் பாத்திர தொழிலாளர்களுக்கு புதிய சம்பள ஒப்பந்தம் குறித்து, அனைத்து தொழிற்சங்க கூட்டு கமிட்டியினர் உற்பத்தியாளர் சங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
நேற்று தொழிற்சங்கத்தினர் எவர் சில்வர் பாத்திர உற்பத்தியாளர்கள் சங்கத்துடன் பேச்சு வார்த்தை நடத்தினர். அதில், 50 சதவீதம் சம்பள உயர்வு கேட்டு வந்த தொழிற்சங்கத்தினர் நேற்று, 19 சதவீதம் குறைந்து 31 சதவீதம் தர கோரிக்கை விடுத்தனர். எவர் சில்வர் பாத்திர உற்பத்தியாளர்கள் இதுவரை 10 சதவீதம் தருவதாககூறிவந்தனர்.
நேற்று அவர்கள் 11 சதவீதம் தருவதாக கூறினர். தொழிற்சங்கத்தினர் ஏற்று கொள்ளவில்லை. இதனால், அடுத்த கட்ட பேச்சு, 16ம் தேதி மாவட்ட தொழிலாளர் துறை அலுவலகத்தில் நடக்கிறது.
