sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

இளம் தலைமுறைக்கான நம்பிக்கையூட்டும் திட்டங்கள்

/

இளம் தலைமுறைக்கான நம்பிக்கையூட்டும் திட்டங்கள்

இளம் தலைமுறைக்கான நம்பிக்கையூட்டும் திட்டங்கள்

இளம் தலைமுறைக்கான நம்பிக்கையூட்டும் திட்டங்கள்


ADDED : ஏப் 05, 2025 05:44 AM

Google News

ADDED : ஏப் 05, 2025 05:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பள்ளி மாணவர்கள் முதல் தொழில்முனைவோர் வரை அனைத்துத் தரப்பினரையும் புதுமை வழியில் பயணிக்க வைக்க ஏதுவாக, 'அடல் இனோவேஷன் மிஷன்', 'ஸ்டார்ட் அப் இந்தியா' போன்ற திட்டங்களை இளைஞர்களிடம் கொண்டு சேர்க்க, மத்திய அரசு களமிறங்கியுள்ளது.

புதுமை என்பது நாட்டின் வளர்ச்சிக்கான முதன்மை சக்தியாக இருக்கிறது. இன்று உலகத்தின் மிக வேகமாக வளரும் தொழில்முனைவோர் நிறைந்த நாடுகளில் ஒன்றாக இந்தியா மிளிர்கிறது. 'ஸ்டார்ட் அப் இந்தியா' மற்றும் 'அடல் இன்னோவேஷன் மிஷன்' ஆகிய, மத்திய அரசின் முன்முயற்சிகள், புதிய தலைமுறைக்கு நம்பிக்கை, ஆதரவு மற்றும் வழிகாட்டுதலை வழங்கி வருகின்றன.

'ஸ்டார்ட் அப் இந்தியா'


கடந்த 2016ல் பிரதமர் நரேந்திர மோடி, 'ஸ்டார்ட் அப் இந்தியா' திட்டத்தை துவக்கினார். தொழில்முனைவோரை ஊக்குவித்து, வேலைவாய்ப்பை உருவாக்குவதே இத்திட்டத்தின் நோக்கம். அதன்தொடர்ச்சியாக, 'நிடி ஆயோக்' வாயிலாக, 'அடல் இன்னோவேஷன் மிஷன்' என்ற புதுமை திட்டம் துவக்கப்பட்டது. ஒரு முழுமையான, புதுமையான தொழில்முனைவோரை உருவாக்குவதே, இத்திட்டத்தின் நோக்கம்.

'அடல் இனோவேஷன் மிஷன்'


பள்ளி மாணவர்கள் முதல் தொழில்முனைவோர் வரை அனைத்துத் தரப்பினரையும் புதுமை வழியில் பயணிக்க வைக்கும் ஒரு தேசிய இயக்கம். இதன்வாயிலாக, பள்ளிகளில், 'அடல் டிங்கரிங் லேப்' துவக்கப்படுகிறது. ஊரக மக்கள் பயன்பெறும் வகையில், 'அடல் கம்யூனிட்டி இன்னோவேஷன்' சென்டர்களும் உருவாக்கப்படுகின்றன.

நாடு முழுவதும், வழிகாட்டி ஆலோசகர்களை நியமித்து, தொழில்முனைவோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. சமூக தேவைகளுக்கு தீர்வு காணும் வகையில், 'அடல் நியூ இந்தியா சேலஞ்ச்' என்ற திட்டமும் உள்ளது.

மத்திய அரசு திட் டத்தில், 'அடல் இன்குபேஷன் சென்டர்' திட்டம் மிக முக்கியமானது. தொடக்க நிறுவனங்களுக்கு தேவையான இடம், வசதி, வழிகாட்டுதல் மற்றும் முதலீட்டு வாய்ப்புகளை வழங்குகிறது.

நாட்டின் முக்கிய தொழில் நகரங்கில், 'அடல் இன்குபேஷன்' மையம் செயல்படுகின்றன; ஒவ்வொரு மையத்துக்கும், மத்திய அரசு, 10 கோடி ரூபாய் வரை நிதி ஒதுக்கியுள்ளது. இம்மையங்கள், பல்வேறு துறைகளில், புதிய முயற்சியுடன் கூடிய தொழில்முனைவோர்களை தேர்வு செய்து, வழிகாட்டுகிறது.

தொழில்நுட்ப மேம்பாடு, சந்தை அணுகல், தொழில்நுட்ப ஆலோசனை, சட்ட மற்றும் நிதி ஆதரவு, முதலீட்டாளர்களுடன் இணைப்பு, கையேடு தயாரிப்பு மற்றும் பயன்பாட்டு தொழில்நுட்பம் ஆகிய வழிகாட்டுதல் வழங்கப்படுகிறது.

மத்தியப்பிரதேசத்தில் இயங்கும் மையம், பல நுாறு தொடக்க நிறுவனங்களை உருவாக்கியுள்ளது. சிக்கிம் மாநில மையம், வடகிழக்கு மாநிலங்களுக்கு ஏற்ற புதுமைகளை உருவாக்கி கொடுக்கிறது. நாட்டின், ஒவ்வொரு பகுதியிலும், புதுமையை புகுத்தும் பணியை, இம்மையங்கள் செய்து வருகின்றன.

வேலை வாய்ப்பு மற்றும் தொழில் முனைவோரை உருவாக்கும் ஒரே நோக்கத்துடன், 'ஸ்டார்ட் அப் இந்தியா' மற்றும் 'அடல் இன்னோவேஷன் மிஷன்' திட்டங்கள் துவக்கப்பட்டன. 'ஸ்டார்ட் அப் இந்தியா' திட்டத்தில், புதிய யோசனையுடன் கூடிய தொழில்கள் துவங்க பல்வேறு சலுகை வழங்கப்படுகிறது.

'அடல் இன்னோவேஷன் மிஷன்' திட்டத்தில், கிராமப்புற மக்களுக்கும் புதுமை வாய்ப்பு வழங்கப்படுகிறது. பெண் தொழில்முனைவோர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

மாணவனாக துவங்கி

தொழில்முனைவோராக மாற்றம்

'அடல் இனோவேஷன் மிஷன்' வழிகாட்டி ஆலோசகர் ஜெய்பிரகாஷ் கூறியதாவது:

தொழில்முனைவோர் வளர்ச்சி என்பது, நாட்டின் வளர்ச்சி என்றாகிவிட்டது. இளம் தலைமுறைக்கு ஒரு தன்னம்பிக்கை சூழலை வழங்கும் வகையில், திட்டங்கள் உள்ளன. பள்ளி மாணவனாக துவங்கும் பயணம், தொழில்முனைவோராக மாற்றம் பெற, 'அடல் இன்னோவேஷன் மிஷன்', அடித்தளமிடும் இணைப்பு பாலமாக இருக்கும். எதிர்கால இந்தியாவை, புதிய கண்டுபிடிப்பு, வேலைவாய்ப்புகள் மற்றும் உலகத்தரமான தொழில் நிறுவனங்களால் நிரப்ப விரும்புகிறோம். அதற்காக, 'அடல் இன்னோவேஷன் மிஷன்' மற்றும் 'ஸ்டார்ட் அப் இந்தியா' போன்ற திட்டங்களை, இளைஞர்களிடம் கொண்டு சேர்க்கும் பணியை,வழிகாட்டி ஆலோசகர்கள் செய்து வருகிறோம்.






      Dinamalar
      Follow us