/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பதவி உயர்வு முரண்பாடுகள்; ெஹச்.எம்.,கள் ஆர்ப்பாட்டம்
/
பதவி உயர்வு முரண்பாடுகள்; ெஹச்.எம்.,கள் ஆர்ப்பாட்டம்
பதவி உயர்வு முரண்பாடுகள்; ெஹச்.எம்.,கள் ஆர்ப்பாட்டம்
பதவி உயர்வு முரண்பாடுகள்; ெஹச்.எம்.,கள் ஆர்ப்பாட்டம்
ADDED : ஆக 13, 2025 10:39 PM
திருப்பூர்; பதவி உயர்வு பெறுவதில் உள்ள முரண்பாடுகளை களைவது உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி, தலைமையாசிரியர் சங்கத்தினர் நேற்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அனைத்து பள்ளிகளுக்கும் அடிப்படை வசதி செய்ய வேண்டும்; அமைச்சு பணியாளர்களை நியமிக்க வேண்டும். மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.
மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வு பெறுவதில் உள்ள முரண்பாடுகளை களைய வேண்டும். ஆசிரியர்கள், தலைமையாசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு சட்டம் உருவாக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் கழகம் நேற்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தியது.
கலெக்டர் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்ட தலைவர் பழனிசாமி தலைமை வகித்தார். செயலாளர் பொன்னுசாமி வரவேற்றார்.
ஒருங்கிணைப்பாளர் தாமோதரன், அமைப்பு செயலாளர் குணசேகரன், துணைத் தலைவர் குணசேகரன், பொருளாளர் ஸ்டெல்லா உட்பட சங்க நிர்வாகிகள், கோரிக்கையை விளக்கி பேசினர்.