/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சொத்து பரிவர்த்தனை தடை நீங்குகிறது; அவிநாசி மக்களின் 2 ஆண்டு பிரச்னைக்கு தீர்வு
/
சொத்து பரிவர்த்தனை தடை நீங்குகிறது; அவிநாசி மக்களின் 2 ஆண்டு பிரச்னைக்கு தீர்வு
சொத்து பரிவர்த்தனை தடை நீங்குகிறது; அவிநாசி மக்களின் 2 ஆண்டு பிரச்னைக்கு தீர்வு
சொத்து பரிவர்த்தனை தடை நீங்குகிறது; அவிநாசி மக்களின் 2 ஆண்டு பிரச்னைக்கு தீர்வு
ADDED : ஏப் 04, 2025 03:18 AM

அவிநாசி; அவிநாசி பேரூராட்சி க.ச., எண் 85 டி மற்றும் இ, இதில் உள்ள அனைத்து சொத்துகள் மீதும் எந்த பரிவர்த்தனையும் செய்யக்கூடாது என திருமுருகன் பூண்டி திருமுருக நாத சுவாமி கோவில் செயல் அலுவலர் விமலா, அவிநாசி சார் பதிவாளர் அலுவலகத்திற்கு தடங்கல் நமூனா வழங்கியிருந்தார்.
கோவிலுக்கு சொந்தமான குறிப்பிட்ட சொத்துகளை மட்டும் குறிப்பிடாததால், அவிநாசி நான்கு ரத வீதியில் உள்ள சொத்து உரிமையாளர்கள் தங்களது சொத்துக்களை வங்கியில் அடமானம் வைப்பதற்கோ, கல்வி கடன் பெறுவதற்கோ, சொத்தை விற்பதற்கோ முடியாத சூழல், கடந்த இரண்டு ஆண்டாக நிலவியது.
செயல் அலுவலரை, கண்டித்து, கோவில் செயல் அலுவலர் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடத்த முடிவெடுத்தனர். பிரச்னைக்கு தீர்வு காண அதிகாரிகள் உறுதி கூறியதையடுத்து,முற்றுகை போராட்டம் கைவிடப்பட்டது.
நேற்று கோவில் செயல் அலுவலர் விமலா, வருவாய்த்துறையினர் அவிநாசி மேற்கு ரத வீதியில் கோவிலுக்கு சொந்தமான இடத்தை ஆய்வு செய்தனர்.
33 சென்ட் அளவில் கோவிலுக்கு சொந்தமான இடம் கண்டறியப்பட்டது.
அப்பகுதியை அளவீடு செய்து வருவாய்த்துறையினர் தாசில்தாரிடம் ஆவணங்களை ஒப்படைத்தனர்.
கோவில் செயல் அலுவலர் விமலாவிடம் கேட்டபோது, ''ஆய்வின்போது கோவிலுக்கு சொந்தமான இடங்கள் கண்டறியப்பட்டது.
அதில் இரு வேறு பகுதிகளில் மூன்று சப் டிவிஷனில் உள்ள இடங்கள் பொதுச்சத்திரம் என பழைய ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி கோவிலுக்கு சொந்தமான இடத்தின் சப் டிவிஷன் நம்பர்களுக்கு மட்டும் தடங்கல் நமூனா வழங்கவும் மற்ற க.ச.எண்களில் உள்ள நம்பர்களை விடுவிக்கவும் அவிநாசி சார் பதிவாளரிடம் கடிதம் வழங்கப்பட்டது.
விரைவில் கோவில் சொத்துகளுடைய க.ச.,எண்களைத் தவிர மற்றவை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.

