ADDED : நவ 11, 2024 07:05 AM

திருப்பூர் : திருப்பூர் மாவட்டசக் ஷம் அமைப்பு சார்பில், மாற்றுத் திறனாளிகளுக்கான இலவச செயற்கை கால் அளவீடு முகாம், தேர்வு செய்யப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான செயற்கை அவயம் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
திருப்பூர், மங்கலம் ரோடு, பூச்சக்காடு, ஸ்ரீ செல்வ விநாயகர் கோவில் மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, மாவட்டத் தலைவர் ரத்தினசாமி தலைமை வகித்தார். செயலாளர் தமிழ்செல்வன், தம்பி நண்பர்கள் நற்பணி மன்ற நிர்வாகி ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஏற்கனவே அளவீடு செய்து தேர்வு செய்யப்பட்ட, ஆறு பேருக்கு, ஜெயவீரா டைஸ் அண்ட் கெமிக்கல்ஸ் உரிமையாளர் கந்தசாமி, தம்பி நற்பணி மன்ற அறக்கட்டளை தலைவர் தம்பி வெங்கடாசலம் ஆகியோரின் நிதி பங்களிப்பில் மாற்றுத் திறனாளிகளுக்கான செயற்கை அவயங்கள் வழங்கப்பட்டது.
முகாமில், புதியதாக செயற்கை அவயம் வேண்டி விண்ணப்பித்த, 13 பேருக்கு அளவீடு செய்யப்பட்டது. திருப்பூர் தி ஐ பவுண்டேஷன் மருத்துவக் குழுவினர், 43 பேருக்கு, கண் பரிசோதனை செய்து, எட்டு பேரை இலவச கண் புரை அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைத்தனர்.
துளசி பார்மஸி மூலம், 54 பேருக்கு ரத்தஅழுத்தம் மற்றும் சர்க்கரை அளவு பரிசோதித்து, மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டது.