ADDED : ஜூலை 14, 2025 12:50 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர் மாவட்ட சக் ஷம் அமைப்பு சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கான செயற்கைக்கால் அளவீடு முகாம், மங்கலம் ரோட்டிலுள்ள செல்வ விநாயகர் கோவில் மண்டபத்தில் நேற்று நடந்தது.
மாவட்ட தலைவர் ரத்தினசாமி தலைமை வகித்தார். செயலாளர் தமிழ்செல்வன் முன்னிலை வகித்தார். மாற்றுத்திறனாளிகள் 31 பேருக்கு, கால் அளவீடு செய்யப்பட்டது. இவர்களுக்கான செயற்கை அவயங்கள் தயாரிக்கப்பட்டு, அடுத்த மாதம் வழங்கப்படும்.