/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கைக்கால் அளவீடு
/
மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கைக்கால் அளவீடு
ADDED : ஜன 12, 2025 11:42 PM

திருப்பூர்; சக் ஷம் அமைப்பின், மாற்றுத்திறனாளிகளுக்கான செயற்கை கால் அளவீடு முகாம், பூச்சக்காடு செல்வ விநாயகர் கோவில் மண்டபத்தில் நேற்று நடந்தது.
செயற்கை கால் உதவி கேட்டிருந்த, ஏழு மாற்றுத்திறனாளிகளுக்கு, அளவீடு செய்யப்பட்டது. செயற்கை கால்கள் அடுத்த மாதம் வழங்கப்பட உள்ளது. தம்பி நண்பர்கள் நற்பணி மன்றத்துடன் இணைந்து, இலவச கண் பரிசோதனை முகாம், ரத்த அழுத்த பரிசோதனை முகாம், சர்க்கரைநோய் பரிசோதனை முகாம் நடந்தது. நுாற்றுக்கும் அதிகமானோர், பரிசோதனை செய்து கொண்டனர். சக் ஷம் மாவட்ட தலைவர் ரத்தினசாமி, செயலாளர் தமிழ்ச்செல்வன், தம்பி நற்பணி மன்ற நிர்வாகி பாலகுமார் உள்ளிட்டோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.