/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
செயற்கைக்கால்கள் அளவீடு 'சக்ஷம்' அமைப்பின் சேவை
/
செயற்கைக்கால்கள் அளவீடு 'சக்ஷம்' அமைப்பின் சேவை
ADDED : டிச 22, 2025 05:08 AM

திருப்பூர்: திருப்பூர், தாராபுரம் ரோடு, ஸ்ரீராமச்சந்திரா மிஷன் ஆசிரம வளாகத்தில் உள்ள மருத்துவமனையில் நேற்று, மாவட்ட சக்ஷம் அமைப்பு சார்பில் செயற்கைக்கால் அளவீடு முகாம் நடந்தது. மாவட்ட தலைவர் ரத்தினசாமி தலைமை வகித்தார்.
ஸ்ரீராமச்சந்திரா மிஷன் நிர்வாகி, ரங்கசாமி, சக் ஷம் மாவட்ட செயலாளர் தமிழ்ச்செல்வம் முன்னிலை வகித்தனர். மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாவலர்களுக்கு, கட்டணமில்லா மருத்துவ சேவை மற்றும் இலவச மருந்துகள் வழங்கப்பட்டன. செயற்கைக்கால் மற்றும் காலிபர்கள் வழங்க, 14 நபர்களுக்கு அளவீடு செய்யப்பட்டது. முகாமில், சக்ஷம் நிர்வாகிகள் ரத்தினசாமி, கண்ணன், பழனிசாமி பொன்னம்மாள் அறக்கட்டளை நிறுவனர் கோவிந்தராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

