/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பனையை பாதுகாக்கணும்: விவசாயிகள் கோரிக்கை
/
பனையை பாதுகாக்கணும்: விவசாயிகள் கோரிக்கை
ADDED : அக் 25, 2024 09:46 PM
உடுமலை: ஆலாங்குளத்தின் கரையிலுள்ள பனைமரங்களை பாதுகாக்கும் வகையில், தடுப்புகள் அமைக்க வேண்டும்.
இது குறித்து, அப்பகுதி விவசாயிகள் மாவட்ட நிர்வாகத்துக்கு அனுப்பியுள்ள மனு: ஆலாங்குளத்தை துார்வாரி, கூடுதலாக நீர் தேக்கினால், சுற்றுப்பகுதியில், நிலத்தடி நீர் மட்டம் பாதுகாக்கப்படும். குளத்தின் கரையில், சில ஆண்டுகளுக்கு முன் நடவு செய்யப்பட்ட பனை விதைகள் செழித்து வளர்ந்துள்ளன.
அப்பகுதியில், குப்பை கொட்டி தீ வைப்பது உள்ளிட்ட செயல்களால், பனை மரங்கள் பாதிக்கும் நிலை உள்ளது. நடவு செய்யப்பட்ட பனை விதைகள் பெரும்பாலும், இத்கைய செயல்களால், பாதிக்கப்பட்டு விட்டது. தற்போது எஞ்சியுள்ளவற்றை பாதுகாக்கும் வகையில், குளத்து கரையிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, பனை மரங்களுக்கு தடுப்பு அமைக்க வேண்டும்.
இவ்வாறு, மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.