/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பெண் குழந்தைகளை காப்போம் சட்ட விழிப்புணர்வு முகாம்
/
பெண் குழந்தைகளை காப்போம் சட்ட விழிப்புணர்வு முகாம்
பெண் குழந்தைகளை காப்போம் சட்ட விழிப்புணர்வு முகாம்
பெண் குழந்தைகளை காப்போம் சட்ட விழிப்புணர்வு முகாம்
ADDED : நவ 22, 2025 05:56 AM

அவிநாசி: திருப்பூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, அவிநாசி வட்ட சட்டப் பணிகள் குழு மற்றும் சமூக நலத்துறை இணைந்து பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுத்தல் விழிப்புணர்வு முகாமை நடத்தின.
அவிநாசி ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில், நடந்த இம்முகாமில், பணிபுரியும் இடங்களில் பெண்களின் பாதுகாப்பினை உறுதி செய்தல் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுத்தல், குழந்தை திருமணத்தை தடுத்தல், குழந்தைகள் கல்வி கற்பதை ஊக்குவித்தல் உள்ளிட்ட அறிவுசார் நிகழ்ச்சி நடைபெற்றது.
மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் சந்தோஷ், சமூக நல வாரிய உளவியல் ஆலோசகர் சண்முகப்பிரியா, ஒருங்கிணைந்த சமூக நலத்துறை சேவை மைய நிர்வாகி ராஜேஸ்வரி, போலீஸ் எஸ்.ஐ. கலாமணி, வக்கீல் பிரகாஷ், அவிநாசி வழக்கறிஞர்கள் சங்க தலைவர் கனகராஜ், வக்கீல்கள் யசோதா, நந்தினி, கார்த்திகா, அன்புச்செல்வி மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள், கிராம சுகாதார செவிலியர்கள், அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

