/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வாய்க்கால் வழித்தடத்தில் பள்ளம் அதிகாரிகளை கண்டித்து மறியல்
/
வாய்க்கால் வழித்தடத்தில் பள்ளம் அதிகாரிகளை கண்டித்து மறியல்
வாய்க்கால் வழித்தடத்தில் பள்ளம் அதிகாரிகளை கண்டித்து மறியல்
வாய்க்கால் வழித்தடத்தில் பள்ளம் அதிகாரிகளை கண்டித்து மறியல்
ADDED : ஜூன் 02, 2025 11:41 PM

பல்லடம் : பல்லடம்,- மங்கலம் ரோடு, வேலம்பாளையம் அருகே, பி.ஏ.பி., பிரதான வாய்க்கால் செல்கிறது. வாய்க்காலை ஒட்டி உள்ள மண் தடமானது, ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சி அறிவொளி நகருக்கு செல்கிறது.
பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள, 20 அடி அகலம் கொண்ட இந்த மண் தடத்தின் ஒரு பகுதியில் பள்ளம் ஏற்பட்டு வாகன ஓட்டிகள், பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக உள்ளது. பொதுமக்கள், பல்லடம் - மங்கலம் ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பொதுமக்கள் கூறியதாவது:
கிளை வாய்க்காலுக்காக அமைக்கப்பட்ட குழாய் அரைகுறையாக பதிக்கப்பட்டதால் வழித்தடம் வலுவிழந்து பள்ளம் உருவானது.
இவ்வழியாக சென்ற லாரி மற்றும் டூவீலர் ஆகியவை சமீபத்தில் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகின. நேற்று டூவீலரில் வந்த வாகன ஓட்டி ஒருவர் பள்ளத்தில் தவறி விழுந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சி அலுவலர்கள், நீர் வழித்தடத்தை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் கூறியதை தொடர்ந்து பொதுமக்கள் மறியலை கைவிட்டனர்.