/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
துணை மின் நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்
/
துணை மின் நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்
துணை மின் நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்
துணை மின் நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்
ADDED : மே 15, 2025 11:54 PM
ஊத்துக்குளி; திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி, குமரிக்கல்பாளையத்தில், 32 அடி நடுகல் இருக்கும் பகுதியில் அகழ்வாராய்ச்சி பணிகளை மேற்கெள்ள வேண்டும். அங்கு ஏராளமான தொல்லியல் ஆதாரங்கள் உள்ளது. இப்பணிகளை மேற்கொள்ள வலியுறுத்தி கிராம மக்கள் சார்பில், குமரிக்கல் தொல்லியல் பாதுகாப்பு இயக்கம் என்ற பெயரில் கடந்த, இரு ஆண்டுகளாக கிராம மக்கள் தொடர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
இச்சூழலில், இப்போராட்டம் மூன்றாம் ஆண்டு துவக்கத்தையொட்டி காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம், செங்கப்பள்ளியில் துவங்கி நடந்து வருகிறது. இதற்கு பல்வேறு விவசாய அமைப்புகள் ஆதரவு தெரிவித்து வருகிறது.
நேற்று தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் ஈசன், பெருந்துரை அ.தி.மு.க., எம்.எல்.ஏ., ஜெயக்குமார் ஆகியோர் உண்ணாவிரத போராட்டம் நடக்கும் இடத்துக்கு சென்று ஆதரவு தெரிவித்தனர். வரும், 17ம் தேதி அனைத்து கட்சி கூட்டம் உண்ணாவிரதம் போராட்டம் நடக்க உள்ளது.