sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 27, 2026 ,பங்குனி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

 முதுகலை மாணவர்களுக்கும் லேப்டாப் வழங்க அரசு கல்லுாரியில் போராட்டம்

/

 முதுகலை மாணவர்களுக்கும் லேப்டாப் வழங்க அரசு கல்லுாரியில் போராட்டம்

 முதுகலை மாணவர்களுக்கும் லேப்டாப் வழங்க அரசு கல்லுாரியில் போராட்டம்

 முதுகலை மாணவர்களுக்கும் லேப்டாப் வழங்க அரசு கல்லுாரியில் போராட்டம்


ADDED : மார் 05, 2026 04:20 AM

Google News

ADDED : மார் 05, 2026 04:20 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை: உடுமலை அரசு கல்லுாரி மாணவர்கள், லேப்டாப், வழங்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழக அரசு, கல்லுாரி மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கி வருகிறது. இதில், முதுகலை பட்டப்படிப்பு படித்து வரும் மாணவர்களுக்கு, வழங்கப்படவில்லை.

இந்நிலையில், உடுமலை அரசு கல்லுாரியில், தமிழ், வணிகவியல், புள்ளியியல் உள்ளிட்ட பல்வேறு பாடப்பிரிவுகளில், முதுகலை முதலாம் ஆண்டு படித்து வரும், 150க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு, அரசு சார்பில் லேப்டாப் வழங்க வேண்டும் என வலியுறுத்தி, வகுப்புகளை புறக்கணித்து, அரசு கல்லுாரி நுழைவாயிலில் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாணவர்கள் கூறுகையில், 'கடந்த அ.தி.மு.க., ஆட்சியில், பிளஸ் 2 பயின்ற மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கப்பட்டது. திட்டம் பாதியில் நிறுத்தப்பட்டு, தற்போது முதுகலை பயின்று வரும் மாணவர்களுக்கு வழங்கப்படவில்லை.

தற்போது, தமிழக அரசு கல்லுாரி மாணவர்களுக்கு வழங்கப்படும் இலவச லேப்டாப் திட்டத்திலும், முதுகலை பயின்று வரும் மாணவர்கள் விடுபட்டுள்ளனர். முதுகலை பயிலும் மாணவர்களுக்கு, செய்முறை பயிற்சி, புராஜக்ட், வைவா, ஆராய்ச்சி, இணைய தளம் வாயிலாக தகவல்கள் சேகரிப்பு என பல்வேறு பணிகள் உள்ள நிலையில், முதுகலை மாணவர்களுக்கு அத்தியாவசிய தேவையாக இது உள்ளது.

எனவே, அரசு கல்லுாரிகளில் முதுகலை பயின்று வரும், மாணவர்களுக்கும், தமிழக அரசு இலவச லேப்டாப் வழங்க வேண்டும்.

இவ்வாறு, தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us