ADDED : ஆக 18, 2026 08:33 PM
அ நிறம் | அளவு
திருப்பூர்: திருப்பூர் கோட்ட நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர் சங்கம், சார்பில், முதல்வர் மற்றும்அமைச்சருக்கு கோரிக்கை மனு அனுப்பும் போராட்டம், கோட்டப் பொறியாளர் அலுவலகம் முன் நடைபெற்றது.சாலைப்பணியாளர்களின் 41 மாத பணிநீக்கக் காலத்தை முறைப்படுத்தி பணிக்காலமாக ஆணை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. இணை செயலாளர் கே.
கருப்பண் வரவேற்றார். கோட்ட தலைவர் கருப்பன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் ராமன், அண்ணாதுரை, ஆறுச்சாமி, சின்னசாமி, முத்துச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டப் பொருளாளர் அந்தோணி ஜெயராஜ், கோட்ட செயலாளர் செல்லத்துரை ஆகியோர் பேசினர். அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் பாண்டியம்மாள் பேசினார். கோட்ட பொருளாளர் விஸ்வநாதன் நன்றி கூறினார்.
