/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குடிநீர் கேட்டு முற்றுகை போராட்டம்: கோழிக்குட்டை மக்கள் ஆவேசம்
/
குடிநீர் கேட்டு முற்றுகை போராட்டம்: கோழிக்குட்டை மக்கள் ஆவேசம்
குடிநீர் கேட்டு முற்றுகை போராட்டம்: கோழிக்குட்டை மக்கள் ஆவேசம்
குடிநீர் கேட்டு முற்றுகை போராட்டம்: கோழிக்குட்டை மக்கள் ஆவேசம்
ADDED : அக் 17, 2025 11:22 PM

உடுமலை: சீரான குடிநீர் வினியோகத்தை வலியுறுத்தி, குடிமங்கலம் ஒன்றிய அலுவலகத்தை கோழிக்குட்டை கிராம மக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
குடிமங்கலம் ஒன்றியம் பண்ணைக்கிணறு ஊராட்சிக்குட்பட்ட கிராமம் கோழிக்குட்டை. இக்கிராம மக்கள் நேற்று மாலை குடிமங்கலம் ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு, நுழைவாயிலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, பி.டி.ஓ., சுப்பிரமணியம் தலைமையிலான அதிகாரிகள், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, திருமூர்த்தி கூட்டுக்குடிநீர் திட்டத்தில், கோழிக்குட்டை கிராமத்துக்கு, ஒதுக்கீடு செய்த அளவுக்கு குடிநீர் வருவதில்லை. நீர் உந்து நிலையத்தில் இருந்து முறைகேடாக பிற கிராமங்களுக்கு அதிகளவு தண்ணீர் செல்கிறது.
இது குறித்து பல முறை புகார் தெரிவித்தும், குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. புதிதாக பிரதான குழாய் அமைக்கும் பணிகளால், அடிக்கடி குடிநீர் தடைபடுகிறது. தண்ணீர் வெளியேறி, ரோடும் சேதமடைகிறது.
கிராமத்துக்கு உரிய தண்ணீர் கிடைக்கும் வகையில், ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும் வரை, உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம்.
இவ்வாறு, தெரிவித்தனர்.
அதிகாரிகள் தரப்பில், 'குடிநீர் வினியோக பிரச்னைகள் குறித்து ஆய்வு செய்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்,' என உறுதியளித்தனர்.
இதையடுத்து, போராட்டத்தை மக்கள் கைவிட்டு திரும்பிச்சென்றனர்.