/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஹிந்து முன்னணியினரை விடுவிக்க வலியுறுத்தி மறியல்
/
ஹிந்து முன்னணியினரை விடுவிக்க வலியுறுத்தி மறியல்
ADDED : பிப் 05, 2025 06:28 AM

திருப்பூர் : திருப்பரங்குன்றத்துக்கு செல்ல முயன்று கைதான ஹிந்து முன்னணியினரை விடுவிக்க வலியுறுத்தி மறியல் செய்த பா.ஜ., வினர் கைது செய்யப்பட்டனர்.
திருப்பரங்குன்றத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த புறப்பட்ட ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம், மாநில செயலாளர் செந்தில்குமார் உள்ளிட்டோரை திருப்பூரில் நேற்று காலை போலீசார் கைது செய்தனர்.
கைதானவர்கள் சந்திராபுரம் ரோட்டில் உள்ள திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர். நேற்று பிற்பகல், மதுரை கிளை ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவில், பழங்காநத்தம் பகுதியில் ஹிந்து அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தலாம் என அனுமதி வழங்கியது.
இதனையடுத்து, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஹிந்து அமைப்பினர், முருக பக்தர்கள் புறப்பட்டு செல்லத் துவங்கினர்.
ஆனால், திருப்பூரில் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்திருந்த மாநில தலைவர் உள்ளிட்டோரை, மாலை 4:00 மணி வரை விடுவிக்கவில்லை. டி.ஜி.பி., அலுவலகத்திலிருந்தும் எந்த உத்தரவும் வரவில்லை என்று கூறி, போலீசார் அவர்களை விடுவிக்க முன்வரவில்லை. முன்னதாக, மதுரை நோக்கி சென்ற பொது செயலாளர் கிேஷார்குமாரை பல்லடம் போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்த தகவல் பரவியதால், மாநகராட்சி கவுன்சிலர் தங்கராஜ் (பா.ஜ.,) தலைமையில் கட்சியினர், போலீசாரை கண்டித்து, சந்திராபுரம் ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து, 30 பேரை போலீசார் கைது செய்து, மற்றொரு திருமண மண்டபத்தில் அடைத்தனர்.