/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வாடகை கட்டடத்துக்கு ஜி.எஸ்.டி., ரத்து செய்யாவிட்டால் போராட்டம்
/
வாடகை கட்டடத்துக்கு ஜி.எஸ்.டி., ரத்து செய்யாவிட்டால் போராட்டம்
வாடகை கட்டடத்துக்கு ஜி.எஸ்.டி., ரத்து செய்யாவிட்டால் போராட்டம்
வாடகை கட்டடத்துக்கு ஜி.எஸ்.டி., ரத்து செய்யாவிட்டால் போராட்டம்
ADDED : நவ 27, 2024 02:00 AM
திருப்பூர்:நாடு முழுதும் வணிக பயன்பாட்டில் உள்ள அனைத்து கட்டடங்களுக்கும், புதிதாக சரக்கு மற்றும் சேவை வரியான, ஜி.எஸ்.டி., விதிக்கப்பட்டுள்ளது. வணிக வாடகை கட்டடங்களுக்கு, வாடகையில், 18 சதவீதம் வரி செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இதனை கண்டித்து, மதுரை, விருதுநகர் மாவட்டங்களில், வரும், 29ம் தேதி கடையடைப்பு போராட்டம் நடக்கிறது. போராட்டத்துக்கு, அனைத்து தொழில் முனைவோர் கூட்டமைப்பு முழு ஆதரவு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு அனைத்து தொழில் முனைவோர் கூட்டமைப்பு தலைவர் முத்துரத்தினம், பொதுச்செயலர் ஜெயபால் ஆகியோர் கூறியதாவது:
வணிக பயன்பாட்டில் உள்ள கட்டடங்களுக்கு, வாடகையில், 18 சதவீதம் ஜி.எஸ்.டி., விதிக்கப்பட்டுள்ளது. இதனை கண்டித்து, மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் நடக்கும் கடையடைப்பு போராட்டத்துக்கு முழு ஆதரவு தெரிவித்துள்ளோம்.
மத்திய அரசு, வணிக கட்டடங்களுக்கான ஜி.எஸ்.டி., வரி விதிப்பை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். இல்லாதபட்சத்தில், தமிழ்நாடு அனைத்து தொழில் முனைவோர் கூட்டமைப்பு சார்பில், மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.