UPDATED : அக் 21, 2026 07:17 PM
ADDED : அக் 21, 2026 07:14 PM

பொங்கலுார்: பொங்கலுார், வேலம்பட்டி முதல் ஆங்கோவில் வரையிலான, 2.20 கி.மீ. நீளமுள்ள ரோடு உள்ளது. இந்த ரோட்டில் ஆங்காங்கே பெரும்பள்ளம் ஏற்பட்டுள்ளது. தண்ணீர் தேங்கி ரோடு மேலும் உடைந்து, போக்குவரத்துக்கு லாயக்கற்றதாக மாறிவிட்டது.
இதுதவிர, வேலம்பட்டி மயானம் முதல் கோவில்பாளையம்- செட்டிபாளையம் ரோட்டை இணைக்கும் இணைப்பு சாலை, 1.60 கி.மீட்டருமு், சிதிலமடைந்து குண்டும் குழியுமாக மாறிவிட்டது. இந்த சாலைகளை சீரமைக்க கோரி பொதுமக்கள் சார்பில் அரசுக்கு பலமுறை கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், உள்ளாட்சித் துறை அதிகாரிகள் இதுவரை கண்டு கொள்ளவில்லை.
எனவே, அதிகாரிகளின் கவனத்தை ஈர்க்க நேற்று தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாநகர் மாவட்ட செயலாளர் ரமேஷ் தலைமையில் அப்பகுதி பொதுமக்கள் திரண்டு வந்து ரோட்டில் நாற்று நடும் போராட்டம் நடத்தினர். விரைவில, சாலை அமைக்காவிட்டால், அடுத்த கட்ட போராட்டம் நடத்தப்படும் என்று பொதுமக்கள் அறிவித்துள்ளனர்.
