/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அக். 8ல் ஆர்ப்பாட்டம்; ஏ.ஐ.டி.யு.சி முடிவு
/
அக். 8ல் ஆர்ப்பாட்டம்; ஏ.ஐ.டி.யு.சி முடிவு
ADDED : செப் 29, 2025 12:32 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்; தமிழ்நாடு ஏ.ஐ.டி.யு.சி.
கட்டட தொழிலாளர் சங்க மாவட்ட கிளை நிர்வாகிகள் பயிற்சி முகாம் நேற்று நடந்தது. ஏ.ஐ.டி.யு.சி. அலுவலகத்தில் நடந்த கூட்டத்துக்கு, சங்கத் தலைவர் மூர்த்தி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் கணேசன், மாநில செயலாளர்கள் சின்னசாமி, சேகர், நடராஜன் ஆகியோர், பேசினர். தற்போது வழங்கி வரும் பணப்பலன்களை உயர்த்தி வழங்கக்கோரி, வரும், நவ., 18ம் தேதி, கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது. தமிழக அரசு, தொழிலாளர் பாதுகாப்பு தொடர்பான கொள்கையை வெளியிட வலியுறுத்தி, அக். 8ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது.