/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
செப்., 2ம் தேதி ஆர்ப்பாட்டம்; தி.மு.க., கூட்டணி ஆலோசனை
/
செப்., 2ம் தேதி ஆர்ப்பாட்டம்; தி.மு.க., கூட்டணி ஆலோசனை
செப்., 2ம் தேதி ஆர்ப்பாட்டம்; தி.மு.க., கூட்டணி ஆலோசனை
செப்., 2ம் தேதி ஆர்ப்பாட்டம்; தி.மு.க., கூட்டணி ஆலோசனை
ADDED : ஆக 31, 2025 12:17 AM

திருப்பூர் : அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்பு விவகாரத்தில், மத்திய அரசைக் கண்டித்து திருப்பூரில் தி.மு.க., கூட்டணி சார்பில் செப்., 2ல் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
இந்திய பொருட்கள் மீது அமெரிக்கா, 50 சதவீத வரியை விதித்துள்ளது. இதனால், திருப்பூர் ஏற்றுமதி வர்த்தகம் பெரும் பாதிப்பை சந்திக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து, முதல்வர் ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
திருப்பூர் தொழிற்துறை பாதிப்புக்கு மத்தியஅரசு எந்த நிவாரண நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்று தி.மு.க., கூட்டணி கட்சிகள் கண்டனம் தெரிவித்து, வரும் 2ம் தேதி ரயில்வே ஸ்டேஷன் முன் ஆர்ப்பாட்டம் நடத்த அறிவித்துள்ளன.
இதுகுறித்த ஆலோசனை கூட்டம் நேற்று திருப்பூர் மத்திய மாவட்ட தி.மு.க., அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட தி.மு.க., செயலாளர் செல்வராஜ் தலைமை வகித்தார். எம்.பி., சுப்பராயன் முன்னிலை வகித்தார்.
தினேஷ்குமார், நாகராஜ் (தி.மு.க.,), நாகராஜ் (ம.தி.மு.க.,), ரவி (இ.கம்யூ.,), ரோபோ ரவி (கொ.ம.தே.க.,), ஜெயபால் (மா.கம்யூ.,), ரத்தினமூர்த்தி (காங்.,), மூர்த்தி (வி.சி.க.,), நசீர் (ம.ம.க.,), சிராஜ் (ஐ.யு.எம்.எல்.,) மற்றும் பலர்பங்கேற்றனர்.
வரும், 2ம் தேதி காலை 9:00 மணிக்கு திருப்பூர் ரயில்வே ஸ்டேஷன் முன்புறம் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறும். இதில் திரளானோரை பங்கேற்க வைப்பது என்று முடிவு செய்யப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் எம்.பி.,க்கள் ராஜா, வெங்கடேசன், முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி உள் ளிட்ட பல்வேறு கட்சி நிர்வாகிகள் பங்கேற்க உள்ளதாக, கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

