ADDED : ஜூன் 29, 2026 11:52 PM

அ நிறம் | அளவு
அவிநாசியில் பொதுமக்களுக்கு இடையூறின்றி சாலையோரக் கடைகளை முறைப்படுத்த வலியுறுத்தி, வரும் 2-ம் தேதி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தப் போவதாக அனைத்து வியாபாரிகள் சங்கத்தினர் அறிவித்திருந்தனர்.
போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜபிரபு, நகராட்சி கமிஷனர் அனு நந்தினி ஆகியோர் முன்னிலையில், சமாதானப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அடுத்தமாத இறுதிக்குள் சாலையோரக் கடைகளை முறைப்படுத்தித் தருவதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். முற் றுகைப் போராட்டம் தற்காலிகமாக ஒத் திவைக்கப்படுவதாக மாவட்டச் செய லாளர் கணேசன், வியாபாரிகள் சங்கத் தலைவர் முத்துகுமரன், இணைச் செயலாளர் கார்த்திகேயன், பி.ஆர்.ஓ. பழனிசாமி, துணைத் தலைவர் தனசேகரன் உள்ளிட்ட பொறுப்பாளர்கள் தெரிவித்தனர்.
