தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ கண்டன ஆர்ப்பாட்டம்

கண்டன ஆர்ப்பாட்டம்

கண்டன ஆர்ப்பாட்டம்


ADDED : செப் 04, 2026 07:33 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 04, 2026 07:33 PM


Follow on Google
அ நிறம் | அளவு

வன்கொடுமை தடுப்பு சட்டத்தை தவறாக பயன்படுத்துவதை கண்டித்து, திருப்பூர் மாநகராட்சி அலுவலக சந்திப்பு பகுதியில், பல்வேறு அமைப்புகள் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

காமராஜர் மக்கள் பாதுகாப்பு பேரமைப்பு மாநில தலைவர் பூமிநாதன் தலைமை வகித்தார். பா.ம.க., மாநில பொருளாளர் திலகபாமா, தமிழ்நாடு வணிகர் மகாஜன சங்க தலைவர் சந்திரன் ஜெயபால், அகில இந்திய பார்வர்டு பிளாக் மாநில தலைவர் கர்ணன், மாவட்ட அமைப்பு செயலாளர் அன்பு ரமேஷ், தமிழ்நாடு நாடார் சங்க தலைவர் முத்து ரமேஷ், நாடார் பேரவை பொதுச்செயலாளர் சூலுார் சந்திரசேகரன் முன்னிலை வகித்தனர்.

ஏழாயிரம் பண்ணை நாடார் சங்கம் செல்லப்பாண்டியன், முக்குலத்தோர் பாதுகாப்பு நலப்பேரவை தியாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். வன்கொடுமை தடுப்பு சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷமிட்டனர்.

–––

மாநகராட்சி அலுவலகச் சந்திப்பு பகுதியில் ஆர்ப்பாட்டம் மேற்கொண்ட பல்வேறு அமைப்பினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us