/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நெடுஞ்சாலையில் ராட்சத பேனர் கருப்புக்கொடி ஏந்தி கண்டனம்
/
நெடுஞ்சாலையில் ராட்சத பேனர் கருப்புக்கொடி ஏந்தி கண்டனம்
நெடுஞ்சாலையில் ராட்சத பேனர் கருப்புக்கொடி ஏந்தி கண்டனம்
நெடுஞ்சாலையில் ராட்சத பேனர் கருப்புக்கொடி ஏந்தி கண்டனம்
ADDED : மே 24, 2025 12:06 AM

பல்லடம் : பல்லடம் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில், ராட்சத பேனர்கள் வைக்கப்பட்டுள்ளதை கண்டித்து, சமூக ஆர்வலர் அண்ணாதுரை, கருப்புக் கொடி ஏந்தி கண்டனத்தை பதிவு செய்தார்.
அவர் கூறியதாவது:
தமிழகம் முழுவதும், நெடுஞ்சாலைகளில் வைக்கப்படும் ராட்சத பேனர்கள் மற்றும் விளம்பர பலகைகளால் எண்ணற்ற விபத்துகள், உயிரிழப்புகள் கடந்த காலங்களில் ஏற்பட்டுள்ளன. இது தொடர்பாக கோர்ட் உத்தரவும் உள்ளது.
இருப்பினும், மாவட்ட நிர்வாகம், நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்டவற்றில் அனுமதி பெற்ற பின்னரே பேனர்கள் வைக்கப்படுவதாக கூறப்படுகிறது. ஆனால், அதிகாரிகளிடம் விசாரித்தால் நாங்கள் எதுவும் அனுமதி தரவில்லை என்று கூறுகின்றனர். எனில், அனுமதியின்றி வைக்கப்படும் ராட்சத பேனர்களால் ஏற்படும் விபத்துகளுக்கு யார் பொறுப்பேற்பது?
காற்று அதிகம் உள்ள பல்லடம் வட்டாரப் பகுதியில், வைக்கப்படும் பேனர்கள், விளம்பர பலகைகள், நிச்சயமாக விபத்தை ஏற்படுத்தும். கவனச்சிதறல் காரணமாக வாகன ஓட்டிகளும் விபத்துக்குள்ளாகும் அபாயம் உள்ளது.
அனுமதியின்றி விளம்பர பலகைகள், பேனர்கள் வைக்க ஒருபோதும் மாவட்ட நிர்வாகம், நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் அனுமதிக்கக்கூடாது. விதிமுறை மீறி வைக்கப்படும் பேனர்களால் ஏற்படும் விபத்துகள், உயிரிழப்புக்கு மாவட்ட நிர்வாகமே பொறுப்பேற்கும் என்று உறுதி அளிக்க முடியுமா? தேசிய மாநில நெடுஞ்சாலைகளில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள அனைத்து பேனர்கள், ராட்சத விளம்பர பலகைகளை உடனடியாக அகற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.