ADDED : செப் 05, 2026 04:08 AM

மறக்க முடியாதவர் மகாலிங்கம்
பல்லடம், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்.
எத்தனையோ மாணவர்கள் நம்மிடம் படித்தாலும், ஒரு சிலரை மட்டும் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாது. அவ்வகையில், என்னிடம் பிளஸ் 2 படித்த ஆனந்தகுமார் என்றும் நினைவில் நிற்கும் மாணவர்.
மிகுந்த மதிப்பும் மரியாதையும் கொண்டவர். எளிமையும் நேர்மையும் அவரது தனிச்சிறப்புகள். தற்போது ஊரக வளர்ச்சித் துறை பயிற்சி இயக்குனராக உள்ளார். தான் இந்த நிலைக்கு உயர்வதற்குக் காரணம் ஆசிரியர்கள்தான் என்று அடிக்கடி கூறுவார்.
சமீபத்தில் குடும்பத்துடன் பல்லடம் வந்து என்னைச் சந்தித்தபோதும், ஆசிரியர் மீதான அதே மரியாதையுடன் காலில் விழுந்து ஆசி பெற்றார்.
ஒரு மாணவர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு ஆனந்தகுமார் சிறந்த உதாரணம்.அவரது நேர்மையான பணியும், ஆசிரியர் என்ற முறையில் எங்களுக்குப் பெருமைஅளிக்கிறது.
ஆசிரியரின் பெருமை ராஜா
உடற்கல்வி ஆசிரியர்,வி.கே. அரசு மேல்நிலைப்பள்ளி, அய்யன்காளிபாளையம்.
மைதானம் என்பது வெறும் விளையாட்டு இடமல்ல; மாணவர்களின் உடலையும் மனதையும் வடிவமைக்கும் இடம். ஆசிரியரின் பயிற்சி, மாணவனின் கனவை நனவாக்க வேண்டும். நான் சுப்பையா பள்ளியில் ஆசிரியராக பணியாற்றியபோது, என்னிடம் பயிற்சி பெற்ற சய்யது முஹம்மது புஹாரி, பள்ளிக் காலத்தில் மாவட்டத்தின் சிறந்த வாலிபால் வீரராகவும், அணியின் கேப்டனாகவும் இருந்தார். இன்று மருத்துவ நிபுணராக உள்ளார்.
மருத்துவக் கல்லுாரியில் இடம் கிடைத்தவுடன் என்னைச் சந்தித்து ஆசி பெற்றார். “எனது உடலுக்கும் மனதுக்கும் வலு சேர்த்த உங்களை மறக்கமாட்டேன்” என்றார். ஒரு ஆசிரியருக்கு இதைவிட வேறு என்ன வேண்டும்?
அவர் தற்போது மேற்கொண்டு வரும் மனிதநேய சேவை யைப் பார்க்கும்போது ஆசிரியராக எனக்குப் பெருமையாக உள்ளது.
சாதித்த சூரியன் கவிதா
உடற்கல்வி ஆசிரியர், அவிநாசி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி.
அவிநாசியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி குடும்
தொடர்ச்சி: 2 பக்கம்:
