தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ ஆறு ராஜவாய்க்கால்களுக்கு கூடுதல் நீர் வழங்குங்க! நெற் பயிர்களை காப்பாற்ற கோரிக்கை

 ஆறு ராஜவாய்க்கால்களுக்கு கூடுதல் நீர் வழங்குங்க! நெற் பயிர்களை காப்பாற்ற கோரிக்கை

 ஆறு ராஜவாய்க்கால்களுக்கு கூடுதல் நீர் வழங்குங்க! நெற் பயிர்களை காப்பாற்ற கோரிக்கை


ADDED : பிப் 25, 2026 05:53 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 25, 2026 05:53 AM


Follow on Google
அ நிறம் | அளவு

உடுமலை: அமராவதி பழைய ஆயக்கட்டு பாசனம், ஆறு ராஜவாய்க்கால் பாசன நிலங்களிலுள்ள நெற் பயிர்களை காப்பாற்ற, மேலும் ஒரு மாதத்திற்கு நீர் வழங்க வேண்டும், என விவசாயிகள் நீர் வளத்துறை அதிகாரிகளுக்கு மனு அளித்துள்ளனர்.

உடுமலை அருகேயுள்ள, அமராவதி அணை வாயிலாக, திருப்பூர், கரூர் மாவட்டத்திலுள்ள, 54,637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. ஆயக்கட்டு பாசன நிலங்களுக்கு நீர் வழங்கப்படுகிறது.

இதில், பழைய ஆயக்கட்டு பாசனம், குமரலிங்கம், கண்ணாடிபுத்துார், சோழமாதேவி, கணியூர், கடத்துார், காரத்தொழுவு ஆகிய ஆறு ராஜவாய்க்கால் பாசனத்துக்கு உட்பட்ட, 4,686 ஏக்கர் நிலங்களில், சம்பா பருவ நெல் சாகுபடி மேற்கொள்ளும் வகையில், கடந்த, நவ., 15ம் தேதி நீர் திறக்கப்பட்டது.

வரும், பிப்., 28 வரை, 105 நாட்களில், 40 நாட்கள் நீர் திறப்பு, 65 நாட்கள் தண்ணீர் நிறுத்தம் என்ற சுற்றுக்கள் அடிப்படையில், 691.20 மில்லியன் கனஅடி நீர் வழங்க அரசு உத்தரவிட்டிருந்தது.

பழைய ஆயக்கட்டு பாசன நிலங்களில், சம்பா நெல் சாகுபடிக்கு நீர் திறக்கப்பட்ட நிலையிலும், நீர் வளத்துறை, பாசன சங்க நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் ஒருங்கிணைப்பு இல்லாததால், இப்பகுதிகளில் சம்பா நெல் நடவு பணி, ஒரு மாதம் வரை தாமதமானது.

தற்போது, இப்பகுதிகளில், நெற்கதிர்கள் வளர்ந்துள்ள நிலையில், அறுவடைக்கு தயாராக ஒரு மாதம் வரை ஆகும் சூழல் உள்ளது. இந்நிலையில், இம்மாத இறுதியில் நீர் திறப்பு நிறுத்தப்பட்டால், நெற் பயிர்கள் நீர் இன்றி காயும் நிலை உள்ளது.

எனவே, பழைய ஆயக்கட்டு பாசனம், ஆறு ராஜவாய்க்கால் பாசன நிலங்களுக்கு, மார்ச் மாதத்தில், இரு சுற்று நீர் வழங்க நீர் வளத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என பாசன சங்க நிர்வாகிகள், அமராவதி செயற்பொறியாளர் மற்றும் அதிகாரிகளுக்கு மனு அளித்துள்ளனர்.

அதிகாரிகளும், அணை நீர் இருப்பை பொருத்து, கூடுதல் நீர் வழங்கப்படும் என உறுதியளித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us