/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை அவயம் வழங்கல்
/
மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை அவயம் வழங்கல்
ADDED : ஜூலை 16, 2025 11:26 PM

திருப்பூர்; சக் ஷம் அமைப்பு, திருப்பூர் குமரன் ரோட்டரி சங்கம் சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை அவயம் வழங்க, கடந்த மாதம் அளவீடு செய்யப்பட்டது.
முகாமில், அளவீடு செய்த, 16 மாற்றுத்திறனாளிகளுக்கு, நேற்று முன்தினம், செயற்கை அவயம் வழங்கப்பட்டது.
திருப்பூர், மங்கலம் ரோடு, குமரன் ரோட்டரி சங்கத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, ரோட்டரி தலைவர் கந்தசாமி, சக் ஷம் அமைப்பின் தலைவர் ரத்தினசாமி, தலைமை வகித்தனர். ரோட்டரி செயலாளர் சிவா, சக் ஷம் மாவட்ட செயலாளர் தமிழ்செல்வம் முன்னிலை வகித்தனர்.
மேற்கு ரோட்டரி முன்னாள் தலைவர் துர்கா சண்முகசுந்தரம், தெற்கு ரோட்டரி சிவபாலன், சிறப்பு விருந்தினராக பங்கேற்று, ஒரு லட்சத்து, 10 ஆயிரத்து, 450 ரூபாய் மதிப்புள்ள, செயற்கை கால் உள்ளிட்ட செயற்கை அவயங்களை வழங்கினர்.
ரோட்டரி சங்க உதவி கவர்னர் பல்ராம், சங்க உறுப்பினர்கள், சக் ஷம் பொறுப்பாளர் முத்துரத்தினம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ரோட்டரி பொருளாளர் பழனிசாமி நன்றி கூறினார்.

