/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அரசு பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப்கள் வழங்கல்
/
அரசு பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப்கள் வழங்கல்
ADDED : ஜூன் 23, 2025 10:41 PM

உடுமலை; அரசுப்பள்ளிகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு, கோவை ரோட்டரி சங்கத்தின் சார்பில் லேப்டாப் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
உடுமலை எஸ்.கே.பி., மேல்நிலைப்பள்ளியில், ரோட்டரி கிளப் ஆப் கோயமுத்துார் மான்செஸ்டர் மற்றும் காக்னிசன்ட் அவுட்ரீச் குழுவின் சார்பில், உடுமலை சுற்றுப்பகுதி அரசு பள்ளிகளில், பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு லேப்டாப்கள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில், தாராபுரம் மாவட்ட கல்வி அலுவலர் அருள்ஜோதி, மாணவர்களுக்கு லேப்டாப்களை வழங்கினார். கல்வித்துறை அலுவலர்கள் சுசிலா, மஞ்சுளா தலைமை வகித்தனர்.
1,500 மாணவர்களுக்கு லேப்டாப்கள் வழங்குவதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். முதற்கட்டமாக நிகழ்ச்சியில், 100 மாணவர்களுக்கு லேப்டாப்கள் வழங்கப்பட்டன. ரோட்டரி கிளப் ஆப் மான்ஸ்டர் தலைவர் ரகுராமன், செயலாளர் சுபசித்ரா, திட்டத்தலைவர் செந்தில் ராஜகோபால், திட்ட இணை ஒருங்கிணைப்பாளர் சுப்ரமணியம் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்தனர்.