/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பள்ளிக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்
/
பள்ளிக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்
ADDED : ஜூலை 01, 2025 10:03 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை; திருமூர்த்திமலை அரசு உண்டு, உறைவிட பள்ளி மாணவர்களுக்கு, தேவையான பொருட்கள் அபெக்ஸ் கிளப் சார்பில் வழங்கப்பட்டது.
உடுமலை அருகே திருமூர்த்திமலையில் செயல்பட்டு வரும் அரசு உண்டு, உறைவிட பள்ளியில், பல்வேறு பகுதிகளை சேர்ந்த பழங்குடியின மாணவர்கள் தங்கி படிக்கின்றனர்.
இப்பள்ளி மாணவர்களுக்கு, 'அபெக்ஸ் கிளப்' உடுமலை சார்பில், 'வாட்டர் ஹீட்டர்', போர்வைகள் மற்றும் இதர பொருட்கள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில், சங்கத்தலைவர் சந்திரன், செயலாளர் சீதாராமன், பொருளாளர் மவுனகுருசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.