
அனுப்பர்பாளையம்;பள்ளி கல்வித்துறை சார்பில், மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழா, அனுப்பர்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்தது.
கலெக்டர் கிறிஸ்துராஜ், தலைமை வகித்தார். மாவட்ட கல்வி அலுவலர் பக்தவச்சலம், வரவேற்றார். அமைச்சர் சாமிநாதன், கலந்து கொண்டு, மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கி பேசினார். அனுப்பர்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 256 பேர், பத்மாவதி புரம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 137 பேர், குமார் நகர் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 300 பேர் என 693 பேருக்கு 33 லட்சத்து, 51 ஆயிரத்து, 880 ரூபாய் மதிப்புள்ள சைக்கிள் வழங்கப்பட்டது.
மேயர் தினேஷ் குமார், மாநகராட்சி முதல் மண்டல தலைவர் உமாமகேஸ்வரி, தி.மு.க., இளைஞர் அணி மாவட்ட அமைப்பாளர் தங்கராஜ் மற்றும் நிர்வாகிகள் சிவபாலன், ராமதாஸ் உட்பட பலர் பங்கேற்றனர்.