/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பி.எஸ்.என்.எல்., ஊழியர்கள் வேலைநிறுத்தம்
/
பி.எஸ்.என்.எல்., ஊழியர்கள் வேலைநிறுத்தம்
ADDED : பிப் 17, 2024 01:48 AM

திருப்பூர்:ஒப்பந்த ஊழியருக்கு குறைந்தபட்சம், 26 ஆயிரம் சம்பளம், தாமதமின்றி 5 ஜி சேவை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பி.எஸ்.என்.எல்., தொழிற்சங்க கூட்டு கமிட்டியினர், நேற்று நாடு முழுதும் வேலைநிறுத்தம் மேற்கொண்டனர். பி.எஸ்.என்.எல்., ஊழியர் சங்கம், அகில இந்திய பாரத் டெலிகாம் போரம், தமிழக தொலைத்தொடர்பு ஊழியர் சங்கம் உள்ளிட்ட நிர்வாகிகள் போராட்டத்தில் பங்கேற்றனர்.
திருப்பூர் ஜெய்வாபாய் ஸ்கூல் ரோட்டில் உள்ள, தலைமை பி.எஸ்.என்.எல்., அலுவலகம் முன் நடந்த கோரிக்கை விளக்க ஆர்ப்பாட்டத்துக்கு, கிளை தலைவர் குமரவேல் தலைமை வகித்தார். கிளை செயலாளர்கள் சங்கிலிதுரை, அருண்குமார் முன்னிலை வகித்தனர்.
அகில இந்திய சங்கத்தின், மாவட்ட தலைவர் சவுந்திரபாண்டியன், மாநில அமைப்பு செயலர் ஜாபர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். ஊழியர் சங்க கிளை செயலாளர் விஸ்வநாதன், முன்னாள் மாநில உதவி செயலர் சுப்ரமணியன் மற்றும் பலர் பங்கேற்றனர்.
வேலைநிறுத்தம் காரணமாக, புதிய இணைப்பு, பழுது சீர் செய்தல், பில்லுக்கான தொகை செலுத்துதல் உள்ளிட்ட பணிகள் பாதிக்கப்பட்டது.