/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பள்ளிகளில் உளவியல் ஆலோசனை திட்டம்; செயல்படுத்த எதிர்பார்ப்பு
/
பள்ளிகளில் உளவியல் ஆலோசனை திட்டம்; செயல்படுத்த எதிர்பார்ப்பு
பள்ளிகளில் உளவியல் ஆலோசனை திட்டம்; செயல்படுத்த எதிர்பார்ப்பு
பள்ளிகளில் உளவியல் ஆலோசனை திட்டம்; செயல்படுத்த எதிர்பார்ப்பு
ADDED : ஜூலை 07, 2025 11:04 PM
உடுமலை; மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை வழங்கும் திட்டத்தை, பள்ளிகளில் செயல்படுத்த வேண்டுமெனகோரிக்கை எழுந்துள்ளது.
வளர்இளம் பருவத்தில் உள்ள மாணவர்கள், பல்வேறு சூழ்நிலைகளால் உளவியல் ரீதியான பாதிப்புகளுக்கு ஆளாகின்றனர்.
பள்ளி மாணவர்களுக்கு, உளவியல் ரீதியான பிரச்னைகளுக்கு தீர்வு காண, பள்ளிகளில் உளவியல் ஆலோசனை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டது.
உளவியல் ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டு, அவர்கள் வாயிலாக அரசு பள்ளிகளில் தனித்தனியாகவும், குழுவாகவும், மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.
மாணவர்களின் மனநிலையை, ஆசிரியர்கள் அறிந்துகொள்வதற்கான வாய்ப்பாகவும் இருந்தது. தேர்வு நேரங்களில், மாணவர்களுக்கு தன்னம்பிக்கை அளிப்பதற்கும் இத்திட்டம் பயன்படுத்தப்பட்டது.
ஆனால், இத்திட்டம் சில ஆண்டுகளுக்கு முன்பு பள்ளிகளில் நிறுத்தப்பட்டுவிட்டது.மீண்டும் இத்திட்டம் விரிவான முறையில் செயல்படுத்த வேண்டுமென, கல்வி ஆர்வலர்கள், பெற்றோரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பள்ளி மேலாண்மைக்குழுவினர் கூறுகையில், 'மாணவர்களுக்கு இது மிகவும் பயனுள்ள திட்டமாக இருந்தது. பள்ளிகளில் இதுபோன்ற திட்டம் மிகவும் அவசியமானதாக உள்ளது.
மாணவர்கள் தேர்வில் மதிப்பெண் பெறுவது உட்பட பல மன குழப்பங்களுக்கு ஆளாகின்றனர். அவர்களுக்கு இத்தகைய ஆலோசனை திட்டம் மீண்டும் செயல்படுத்த, கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.

