/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பள்ளிகளில் உளவியல் ஆலோசனை திட்டம்; புதிய கல்வியாண்டில் செயல்படுத்துங்க
/
பள்ளிகளில் உளவியல் ஆலோசனை திட்டம்; புதிய கல்வியாண்டில் செயல்படுத்துங்க
பள்ளிகளில் உளவியல் ஆலோசனை திட்டம்; புதிய கல்வியாண்டில் செயல்படுத்துங்க
பள்ளிகளில் உளவியல் ஆலோசனை திட்டம்; புதிய கல்வியாண்டில் செயல்படுத்துங்க
ADDED : ஏப் 09, 2025 10:10 PM
உடுமலை; புதிய கல்வியாண்டில், அரசுப்பள்ளிகளில் நடமாடும் ஆலோசனை மைய திட்டத்தை செயல்படுத்த, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
நடப்பு கல்வியாண்டு நிறைவடைந்து புதிய கல்வியாண்டு, 2025 - 26 துவங்க உள்ளது. அரசுப்பள்ளிகளில், மாணவர்களுக்கு பல்வேறு திட்டங்கள், நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன.
புதிய கல்வியாண்டுக்கான சேர்க்கையும் மார்ச் மாதம் முதல் துவங்கியுள்ளது. அரசு பள்ளிகளில், புதிய கல்வியாண்டில் மாணவர்களுக்கு உளவியல் ரீதியான ஆலோசனை வழங்குவதற்கான திட்டத்தை, செயல்படுத்த வேண்டுமென பெற்றோர் எதிர்பார்க்கின்றனர்.
கொரோனா பாதிப்புக்கு முன்பு, அரசுப்பள்ளிகளில் நடமாடும் ஆலோசனை மைய திட்டம் செயல்படுத்தப்பட்டது. மாவட்டத்துக்கு ஒரு மையம் வீதம் அமைக்கப்பட்டு, அதில் ஒரு உளவியல் ஆலோசகர் மற்றும் திட்டத்துக்கான ஒரு வாகன வசதியும் ஏற்படுத்தப்பட்டது.
உளவியல் ஆலோசகர், அரசுப்பள்ளிகளில் தொடர்ந்து பார்வையிட்டு மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கினர்.
பாலியல் ரீதியான பிரச்னைகள், வளர் இளம் பருவத்தினர் தவறான வழிகளில் செல்வதை தவிர்ப்பது, கற்றலில் கவனத்துடன் இருப்பது என மாணவர்களை நல்வழிப்படுத்துவதற்கான திட்டமாக இருந்தது.
கொரோனாவுக்கு பின், இத்திட்டம் பள்ளிகளில் செயல்படுத்தப்படவில்லை. பள்ளி ஆசிரியர்கள், பெற்றோரிடமும் இத்திட்டம் பெரிதும் வரவேற்பை பெற்றுள்ளது.
புதிய கல்வியாண்டில் இத்திட்டத்தை செயல்படுத்த, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென பள்ளி மேலாண்மைக்குழுவின் வாயிலாக பெற்றோர் வலியுறுத்துகின்றனர்.

