/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பள்ளியில் 'உறக்க' நிலையில் பி.டி.ஏ.,; தட்டியெழுப்புமா கல்வித்துறை?
/
பள்ளியில் 'உறக்க' நிலையில் பி.டி.ஏ.,; தட்டியெழுப்புமா கல்வித்துறை?
பள்ளியில் 'உறக்க' நிலையில் பி.டி.ஏ.,; தட்டியெழுப்புமா கல்வித்துறை?
பள்ளியில் 'உறக்க' நிலையில் பி.டி.ஏ.,; தட்டியெழுப்புமா கல்வித்துறை?
ADDED : ஜூன் 11, 2025 06:35 AM

திருப்பூர்; திருப்பூரில் உள்ள பெரும்பாலான அரசு பள்ளிகளில், பெற்றோர் ஆசிரியர் கழகங்களின்(பி.டி.ஏ.,) செயல்பாடுகள், திருப்திகரமாக இல்லை என் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஒவ்வொரு அரசு பள்ளிகளிலும் கல்வித்தரம், கட்டமைப்பு உள் ளிட்டவை மேம்படுத்தப்பட வேண்டும் என்ற நோக்கில், பி.டி.ஏ., அமைக்கப்படுகிறது.
பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பெற்றோரை உள்ளடக்கிய இக்குழு, மாணவர்களுக்கும், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் கல்வித்துறைக்கு இடையே ஒரு பாலமாக செயல்படுகிறது.
மாணவர் நலன் கருதி கட்டட வசதி, கழிப்பறை, நுாலகம், விளையாட்டு மைதானம் உள்ளிட்ட கட்டுமானங்களை ஏற்படுத்துவது மேம்படுத்துவது உள்ளிட்டவை பி.டி.ஏ.,வின் நோக்கமாக உள்ளது. அதோடு, பள்ளிகளில் பி.டி.ஏ., சார்பில் ஆசிரியர்களை நியமித்து, சம்பளம் வழங்கவும், நிரந்தர ஆசிரியர்களை நியமிக்க கோரி அரசுக்கு கருத்துரு அனுப்புவது உள்ளிட்ட அதிகாரங்கள் பி.டி.ஏ.,வுக்கு உண்டு.
பி.டி.ஏ., தலைவர், துணைத் தலைவர், செயலாளர், இணைச் செயலாளர் மற்றும் நான்கு பெற்றோர் உறுப்பினர்களாக இருக்க வேண்டும். அவர்களின் குழந்தைகள், அப்பள்ளியில் படிக்க வேண்டும் என்பது, முக்கிய விதி.
இருப்பினும், பெரும்பாலான பள்ளிகளில் பி.டி.ஏ., செயல்பாடு மந்த நிலையில் இருக்கிறது எனவும், பி.டி.ஏ., நிர்வாகிகள் கட்டமைப்பு உறக்க நிலையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. மூன்றாண்டுக்கு ஒருமுறை, பி.டி.ஏ., உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட வேண்டும் என்பதுவிதி.
ஆனால், ஒரே உறுப்பினர்கள் நீண்ட காலமாக பதவியில் இருந்து வருவதால், புதிய மாற்றங்கள் ஏற்படாமல், பள்ளி வளர்ச்சியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
ஆரம்ப கல்வி துவங்கி தடுமாற்றம் இல்லாமல் தொடர்ந்தால் தான், 10 மற்றும் பிளஸ் 2வில் மாண வர்கள் கரைசேர்வர் என்ற சூழலில், உறக்க நிலையில் உள்ள பெற்றோர் ஆசிரியர் கழகத்தை, மாவட்ட கல்வித்துறை தட்டியெழுப்பி, முனைப்புடன் செயல்படும் பெற்றோரை உறுப்பினராக கொண்டு, பி.டி.ஏ., கட்டமைக்க வேண்டும் என்பது, கல்வியாளர்களின் எதிர் பார்ப்பு.