/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கோவிலுக்குள் புகுந்த நபர்; பொதுமக்கள் 'கவனிப்பு'
/
கோவிலுக்குள் புகுந்த நபர்; பொதுமக்கள் 'கவனிப்பு'
ADDED : நவ 05, 2024 06:24 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொங்லுார்; கண்டியன் கோவிலில் கண்டீஸ்வரர் கோவிலுக்கு வெளியே செருப்பு மற்றும் பை என சந்தேகத்திற்கு இடமான பொருட்கள் கிடந்துள்ளது. கோவில் குருக்கள் உள்ளே சென்று பார்த்ததில் ஒரு நபர், உள்ளே இருந்தது தெரியவந்தது. அவர் சத்தம் போடவே, அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து பார்த்த போது, கோவிலில் இருந்த மைக் ஒயரை அறுத்து கட்டி வைத்துள்ளது தெரியவந்தது.
அந்நபரை பொதுமக்கள் 'நையப்புடைத்து' அவிநாசிபாளையம் போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில், உளுந்துார் பேட்டை, கறிவேப்பிலைபாளையத்தை சேர்ந்த ஆனந்தராஜ், 40 என்பது தெரியவந்தது.