/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வழித்தடத்தில் கூடுதல் பஸ்; பொதுமக்கள் வலியுறுத்தல்
/
வழித்தடத்தில் கூடுதல் பஸ்; பொதுமக்கள் வலியுறுத்தல்
வழித்தடத்தில் கூடுதல் பஸ்; பொதுமக்கள் வலியுறுத்தல்
வழித்தடத்தில் கூடுதல் பஸ்; பொதுமக்கள் வலியுறுத்தல்
ADDED : ஜூலை 10, 2025 08:15 PM
உடுமலை; உடுமலை-திருமூர்த்திமலை வழித்தடத்தில் கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இந்த வழித்தடத்தில், போடிபட்டி, பள்ளபாளையம், ஜல்லிபட்டி, தளி உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. மேலும், திருமூர்த்திமலை ஆன்மிக மற்றும் சுற்றுலாத்தலமாக உள்ளது. இந்த வழித்தடத்தில், உடுமலையில் இருந்து குறைந்தளவே பஸ்கள் இயக்கப்படுகிறது.
குறிப்பாக, மாலை, இரவு நேரத்தில், கிராம மக்கள், போதிய பஸ் இல்லாமல் மிகவும் சிரமப்படுகின்றனர். காலை நேரத்தில் மாணவர்களும் நெருக்கடியாக பயணிக்க வேண்டியுள்ளது.
தற்போது இந்த வழித்தடத்தில், புதிதாக விடப்பட்டுள்ள பஸ்சில், நெருக்கடி அதிகளவு உள்ளது. எனவே, உடுமலை கிளை போக்குவரத்து கழக அதிகாரிகள் ஆய்வு செய்து, கூடுதல் பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.