/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'பொதுமக்கள் கோரிக்கைகள் குறித்து சட்டசபையில் பேச முடிவதில்லை'
/
'பொதுமக்கள் கோரிக்கைகள் குறித்து சட்டசபையில் பேச முடிவதில்லை'
'பொதுமக்கள் கோரிக்கைகள் குறித்து சட்டசபையில் பேச முடிவதில்லை'
'பொதுமக்கள் கோரிக்கைகள் குறித்து சட்டசபையில் பேச முடிவதில்லை'
ADDED : ஏப் 19, 2025 11:25 PM

அனுப்பர்பாளையம்: தி.மு.க., அரசைக் கண்டித்தும், அ.தி.மு.க., அரசின் சாதனைகளை விளக்கியும், திருப்பூர் மாநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை சார்பில், அவிநாசி ரோடு, எஸ்.ஏ.பி., ஸ்டாப் அருகில் தெருமுனை பிரசாரம் நடந்தது. மாநகர் மாவட்ட அ.தி.மு.க., செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் பேசியதாவது:
சட்டமன்றத்தில் முதல்வர் ஸ்டாலின் பற்றி புகழ்ந்து பேசுவது மட்டுமே நடக்கிறது. மக்கள் கோரிக்கை குறித்து எடுத்து பேச சபாநாயகர் அனுமதிப்பதில்லை. எதிர்கட்சி தலைவர்கூட பேச வாய்ப்பு கிடைப்பது அரிதாக உள்ளது.
கடந்த 20 நாட்களாக விசைத்தறியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பிரச்னையை தீர்க்க அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை. தொழில் காணாமல் போய்விடுமோ என தொழிலாளர்கள் அச்சத்தில் உள்ளனர்.
விலைவாசி, வீட்டு வரி, சொத்துவரி, மின் கட்டணம், குடிநீர் கட்டணம் என அனைத்தும் உயர்ந்து மக்கள் சிரமப்படுகின்றனர். வரி உயர்வு மற்றும் மின் கட்டண உயர்வால் பனியன் தொழில் வேறு மாநிலத்திற்கு செல்ல போகிறது.
நம் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் என்றால் இந்த ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும். மீண்டும் ஜெயலலிதா ஆட்சியை பழனிசாமி அமைப்பார்.
எம்.எல்.ஏ., விஜயகுமார், முன்னாள் எம்.எல்.ஏ., குணசேகரன், மாவட்ட ஜெ. பேரவை செயலாளர் லோகநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

