ADDED : நவ 14, 2024 11:31 PM

அனுப்பர்பாளையம் ; திருப்பூர் மாநகராட்சி பகுதியில்சேகரமாகும் குப்பைகளை, காளம்பாளையத்தில் உள்ள காலாவதியான பாறைக்குழியில் கொட்டப்பட்டு வருகிறது.
இதற்கு அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்து, குப்பை கொட்டுவதை தடுத்து நிறுத்த தீர்மானம் நிறைவேற்ற வேண்டும், என ஊராட்சி தலைவரிடம் மனு கொடுத்தனர். ஆனால், ஊராட்சி தலைவர் மறுத்து விட்டார்.
ஊராட்சி கூட்டத்தை கூட்டி குப்பை கொட்ட எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும், குப்பை கொட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, ஊராட்சி அலுவலகம் முன் காத்திருப்பு போராட்டம் நடத்தப்போவதாக பொதுமக்கள் அறிவித்த நிலையில், ஆர்ப்பாட்டம் நடத்தி சென்றனர்.
இதில் பெண்கள் உட்பட, 24 பேர் மட்டுமே பங்கேற்றனர். இதில், ஊராட்சி தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் யாரும் பங்கேற்கவில்லை.