/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பொதுத் தேர்வு மதிப்பெண் பட்டியல்
/
பொதுத் தேர்வு மதிப்பெண் பட்டியல்
ADDED : ஜூன் 09, 2025 12:42 AM
திருப்பூர்; பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களின் மதிப்பெண் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ள, இறுதி வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அரசு தேர்வுகள் துறை இயக்குனரின் வழிகாட்டுதல்:
பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான பள்ளி மாணவர்களின் பெயர் பட்டியலில் திருத்தங்களை மேற்கொள்ள, பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தேர்வுத்துறையால் பலமுறை வாய்ப்பளிக்கப்பட்டது.
சில பள்ளிகளின் பெயர் பட்டியலில் திருத்தங்கள் முறையாக மேற்கொள்ளப்படவில்லை. தற்போது தேர்வு முடிவு வெளியிடப்பட்ட பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கான மதிப்பெண் பட்டியலில், தேர்வர்களது தலைப்பெழுத்து, பெயர், மொழிப்பாடம் மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழில் தேர்வர்களது பெயர், பிறந்த தேதி, போட்டோ, பயிற்றுமொழி ஆகியவற்றில் திருத்தங்களை மேற்கொள்ள இறுதி வாய்ப்பு வழங்கப்படுகிறது.
ஏதேனும் திருத்தங்கள் இருந்தால், தலைமையாசிரியர்கள் தங்களது மாணவர்களின் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ், மதிப்பெண் பட்டியல் நகலில் உரிய திருத்தங்களை மேற்கொண்டு, சான்றொப் பமிட்டு, அதனை அரசு தேர்வுகள் உதவி இயக்குனர் அலுவலகத்துக்கு வரும், 13ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.