ADDED : ஜூன் 22, 2026 03:55 AM

அ நிறம் | அளவு
தாராபுரம்: தாராபுரம் நகராட்சிக்கு உட்பட்ட பழைய திருப்பூர் ரோடு பகுதியில் தொடர் மின்வெட்டு, பொதுக்கழிப்பிடம் பராமரிப்பின்மை, முறையற்ற குடிநீர் வினியோகம் மற்றும் சாக்கடை கால்வாய் சுத்தம் செய்யாமை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் நிலவி வருகின்றன.
தீர்வு காண வலியுறுத்தி, நேற்று காலை அப்பகுதி பொதுமக்கள் உடைந்த மரக்கிளைகள் மற்றும் குப்பை வண்டிகளைச் சாலையின் குறுக்கே போட்டு திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் பழைய திருப்பூர் ரோட்டில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மறியலைக் கைவிடச் செய்தனர்.
