ADDED : அக் 01, 2026 07:47 AM

அ நிறம் | அளவு
திருப்பூர்: மங்கலம் ஊராட்சி, சின்னப்புத்துார் பிரிவு பஸ் ஸ்டாப்பில் இருந்த நிழற்குடை, வாகனம் மோதி சேதமடைந்தது.
கடந்த மூன்று ஆண்டுகளாக புதிய நிழற்குடை அமைக்கப்படாததால், பயணிகள் வெயிலில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.
புதிய நிழற்குடை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. பொதுமக்கள் முயற்சியில் நிலம் அளவீடு செய்யப்பட்டு, விபத்துதாரரிடம் இருந்து பெறப்பட்ட இழப்பீட்டு தொகை மற்றும் பொதுமக்கள் வழங்கிய நிதியை கொண்டு, ரூ.70 ஆயிரம் மதிப்பில் புதிய நிழற்குடை அமைக்கப்பட்டது.
பல்வேறு கட்சியினர், தன்னார்வலர்கள் முன்னிலையில், சின்னப்புத்துார் ஊர்த்தலைவர் சின்னமுத்து புதிய நிழற்குடையை திறந்து வைத்தார்.
