/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மலை போல் குப்பை; பொதுமக்கள் தவிப்பு
/
மலை போல் குப்பை; பொதுமக்கள் தவிப்பு
ADDED : ஜூலை 20, 2025 11:15 PM

பொங்கலுார்; கொடுவாய், வேகமாக வளரும் நகராக உருவெடுத்துள்ளது. மக்கள் தொகைக்கேற்ப அடிப்படை வசதிகள் அறவே கிடையாது. குப்பை கொட்டுவதற்கு போதுமான இட வசதி இல்லை.  குப்பை அள்ளும் பணியும் மந்தகதியில் நடக்கிறது.  பலரும் ரோட்டிலேயே குப்பைகளை கொட்டுகின்றனர்.
ஊராட்சி நிர்வாகமும் சேகரிக்கும் குப்பைகளை வசதி குறைந்தோர் வாழும் குடியிருப்பு அருகே கொட்டி வருகிறது. அங்கு கடும் துர்நாற்றம் வீசுகிறது. குறிப்பாக, வீட்டின் உயரத்திற்கு குப்பைகள் குவித்து வைக்கப்பட்டுள்ளது. குப்பைகளால் பல்வேறு தொற்று நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது.
அதிலிருந்து வரும் துர்நாற்றத்தை தாக்குப்பிடிக்க முடியாமல் பொதுமக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். குப்பை பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்.

