/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கிராமங்களில் மருத்துவ முகாம் பொதுமக்கள் வலியுறுத்தல்
/
கிராமங்களில் மருத்துவ முகாம் பொதுமக்கள் வலியுறுத்தல்
கிராமங்களில் மருத்துவ முகாம் பொதுமக்கள் வலியுறுத்தல்
கிராமங்களில் மருத்துவ முகாம் பொதுமக்கள் வலியுறுத்தல்
ADDED : ஏப் 18, 2025 11:15 PM
உடுமலை: உடுமலை ஒன்றியத்தில் மொத்தமுள்ள, 38 ஊராட்சிகளுக்கு நான்கு அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன. சுகாதார நிலையங்களின் கீழ் கிராமங்களில் துணை சுகாதார நிலையங்கள் உள்ளன.
கோடையின் வெப்பம் தொடர்ந்து அதிகரித்து வருவதையொட்டி, தொற்று பாதிப்புகளும் அதிகரிக்கிறது. கிராமங்களில் காய்ச்சல், சளி மற்றும் நீர்சத்து குறைபாட்டினால் மக்கள் உடல்நலம் பாதிக்கப்படுகின்றனர்.
குழந்தைகளுக்கு தற்போது விடுமுறையும் துவங்குவதால், பள்ளிகளில் அவர்களை கண்காணிப்பதற்கும் வழியில்லாமல் உள்ளது.
விடுமுறையில் திறந்த வெளியில் விளையாடுவதற்கு, குழந்தைகள் அதிகம் விரும்புகின்றனர். இதனால் வெப்ப பாதிப்பினால் ஏற்படும் நோய் தொற்றுகள் மற்றும் அதற்கான தடுப்பு முறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியுள்ளது. ஊராட்சிகளில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களின் சார்பில், சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்துவதற்கு, ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.