ADDED : அக் 13, 2024 11:40 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்: விஜயதசமியை முன்னிட்டு, கோ சேவா சமிதி சார்பில், 43வது மாதாந்திர கோ பூஜை திருப்பூர், தாராபுரம் ரோட்டில் உள்ள விவேகானந்தா வித்யாலயாவில் நடந்தது.
உலக நலன் வேண்டி, 27 நட்சத்திர மகா யாகமும், நவ சக்தி வேள்வியும், 27 நட்சத்திரங்களுக்கு, 27 பாரம்பரியமான நாட்டு இன பசுக்களைக் கொண்டு கோ பூஜை மேற்கொள்ளப்பட்டது. காமாட்சிபுரம் ஆதினம் ஸ்ரீ பஞ்சலிங்கேஸ்வர சுவாமிகள் தலைமை வகித்து நடத்தினார். ஏராளமான மாணவ, மாணவியர், பெற்றோர், பொதுமக்கள் பங்கேற்றனர்.