/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஆந்திரா பேட்டிங்கை சிதறடித்த புனே பவுலர்கள்!
/
ஆந்திரா பேட்டிங்கை சிதறடித்த புனே பவுலர்கள்!
ADDED : ஜன 18, 2024 12:47 AM

திருப்பூர் : டி.எஸ்.சி., சேலஞ்சர் டிராபி கிரிக்கெட் போட்டி, வயர்ஸ் கிரிக்கெட் கிளப் மைதானத்தில் நடந்து வருகிறது. இன்றுடன் லீக் போட்டி நிறைவு பெறுகிறது. நாளை (19ம் தேதி) அரையிறுதி போட்டியும், வரும், 20 ம் தேதி இறுதி போட்டியும் நடக்கவுள்ளது.
நேற்று நடந்த முதல் போட்டியில், ஆந்திராவின் அனந்தபூர் ஸ்போர்ஸ்ட் அகாடமி அணி டாஸ் வென்று பவுலிங்கை தேர்வு செய்தது. பேட்டிங் செய்த புனே கிரிக்கெட் நெக்ஸ்ட் அகாடமி அணி, 27.5 ஓவரில், அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 166 ரன் எடுத்தது.
இந்த அணியின் பேட்ஸ்மேன் யுவராஜ், 39 ரன் எடுத்தார். அனந்தபூர் அணி பவுலர் வருண்நாயுடு, ஆறு ஓவர்களில், 20 ரன் கொடுத்து, மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார். 180 பந்துகளில், 166 ரன் என்ற எளிய இலக்கை விரட்டிய அனந்தபூர் அணிக்கு, புனே அணி பவுலர்கள் துவக்கம் முதலே நெருக்கடி கொடுத்தனர்.
குறிப்பாக, புனே அணி பவுலர், சனுரியா யாதவ், ஆறு ஓவரில், நான்கு விக்கெட் கைப்பற்றி, 24 ரன் கொடுத்தார். பவுலர் ராஜ்டிங்கிரோ, ஆறு ஓவரில், 36 பந்துகள் வீசி, ஏழு ரன் மட்டும் கொடுத்து, மூன்று விக்கெட் கைப்பற்றி, அனந்தப்பூர் பேட்ஸ்மேன்களை திணறடித்தார்.
இதனால், ஆந்திரா அனந்தப்பூர் ஸ்போர்ட்ஸ் அகாடமி அணி, 23.4 ஓவரில், 89 ரன்களுக்கு ஆல்அவுட்டானது. 77 ரன்கள் வித்தியாசத்தில், புனே கிரிக்கெட் நெக்ஸ்ட் அகாடமி அணி சூப்பர் வெற்றி பெற்றது. இந்த அணியின் பவுலர், சனுரியா யாதவ் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
பேட்டிங், பவுலிங்இரண்டிலும் அசத்தல்
மதியம் நடந்த மற்றொரு போட்டியில், ைஹதாரபாத் கோச்சிங் பியாண்ட் அணி டாஸ் வென்று பேட்டிங் செய்தது.
நமேன்சவுத்ரி, 81 ரன், கரூவ் ரவீந்திரன், 63 ரன் பேட்டிங்கில் அசத்தினர். கடைசி வரை ஆட்டமிழக்காமல், சசாங், 45 ரன் எடுத்தார். பேட்ஸ்மேன்கள் அதிரடியால், ைஹதாரபாத் அணி, 30 ஓவரில் நான்கு விக்கெட் இழப்புக்கு, 255 ரன் குவித்தது.
கடின இலக்கை விரட்டிய கடப்பா ஒய்.எஸ்.ஆர்., கிரிக்கெட் அசோசியேஷன் அணி, 18.4 ஓவரில், அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 94 ரன் எடுத்தது. 161 ரன் வித்தியாசத்தில், ைஹதாரபாத் கோச்சிங் பியாண்ட் அணி வெற்றி பெற்றது.
ைஹதாரபாத் அணி வீரர், கரூவ் ரவிந்திரன், 63 ரன் எடுத்து, பேட்டிங்கில் அசத்தியதுடன், இரண்டு ஓவர்களில், 12 ரன் கொடுத்து, மூன்று விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினார். பேட்டிங், பவுலிங் இரண்டிலும் அசத்திய, இவர், ஆட்ட நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார்.