ADDED : ஆக 13, 2025 10:34 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்; கரூர் மாவட்டம், குளித் தலையை சேர்ந்தவர் சிவநாராயணசாமி, 56. திருப்பூர், ராமநாதபுரத்தில் தங்கி லாரி டிரைவராக வேலை செய்து வந்தார்.
கடந்த, 2022 ஜூலை 12ல் விநாயகப்பா நகரில்டிப்பர் லாரியை ஓட்டி சென்றபோது, லாரி மோதியதில் அதே பகுதியை சேர்ந்த சரஸ்வதி பலியானார். வழக்கை விசாரித்த திருப்பூர், ஜே.எம்., 3 கோர்ட், சிவநாராயண சாமிக்கு, ஒரு ஆண்டு சிறை தண்டனை விதித்தது.
தீர்ப்பை எதிர்த்து சிறப்பு கோர்ட்டில் மேல் முறையீடு செய்தார். வழக்கை விசாரித்த நீதிபதி சுரேஷ், மனுவை தள்ளுபடி செய்து, ஜே.எம்., கோர்ட் விதித்த தீர்ப்பை உறுதி செய்தார். வழக்கில் அரசு தரப்பில் கூடுதல் அரசு வக்கீல் விவேகானந்தம் ஆஜரானார்.

