UPDATED : ஜூன் 17, 2026 07:34 PM
ADDED : ஜூன் 17, 2026 07:31 PM

அ நிறம் | அளவு
சேவூர்;சேவூர் அடுத்த புஞ்சை தாமரைக்குளம் பகுதியில் ஜூன்16 பெய்த கனமழை மற்றும் சூறாவளிக்கு, விவசாயி மயில்சாமி என்பவரது தோட்டத்தில் அறுவடைக்குத் தயாராக இருந்த 500 வாழை மரங்கள் முறிந்து விழுந்து சேதமடைந்தன.
ஓராண்டு காலம் பாடுபட்டு வளர்த்த வாழைகள் அனைத்தும் கண்முன்னே அழிந்து கிடப்பதைக் கண்டு விவசாயி வேதனை அடைந்துள்ளார். கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வேளாண்மைத்துறை அதிகாரிகள் நேரில் சென்று பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்தனர்.
---
