/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கோடையிலும் தரமான பட்டுக்கூடு அறுவடை; புதிய கலப்பின ரகம் அறிமுகம்
/
கோடையிலும் தரமான பட்டுக்கூடு அறுவடை; புதிய கலப்பின ரகம் அறிமுகம்
கோடையிலும் தரமான பட்டுக்கூடு அறுவடை; புதிய கலப்பின ரகம் அறிமுகம்
கோடையிலும் தரமான பட்டுக்கூடு அறுவடை; புதிய கலப்பின ரகம் அறிமுகம்
ADDED : மே 13, 2025 11:49 PM

உடுமலை : கோடை காலத்தில், தரமான பட்டுக்கூடுகளை அறுவடை செய்ய, மத்திய பட்டு வாரியத்தால், புதிய கலப்பின பட்டுப்புழு இனம், உடுமலையில் அறிமுகம் செய்யப்பட்டது.
மத்திய பட்டு வாரியத்தால், வெண்பட்டுக்கூடுகள் வளர்ப்பில் புதிய தொழில்நுட்பங்கள் தொடர்ந்து அறிமுகப்படுத்தப்பட்டு, விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.அவ்வகையில், தற்போது கோடை காலத்தில், வெண்பட்டுக்கூடு வளர்ப்பு விவசாயிகளுக்கு சவாலானதாக மாறியுள்ளது.
பல்வேறு காரணங்களால், இந்த சீசனில், பட்டுக்கூடு அறுவடை பாதிக்கிறது. இதனால், புழு வளர்ப்பு மனைகளில், கோடை சீசனில் புழு வளர்ப்பை பெரும்பாலான விவசாயிகள் கைவிடுகின்றனர்.
இப்பிரச்னைக்கு தீர்வாக மத்திய பட்டு வாரியம், கோடை காலத்திலும், தரமான பட்டுக்கூடு அறுவடை செய்யும் வகையில், டிடி21*டிடி56 என்ற புதிய பட்டுப்புழு இனத்தை மத்திய பட்டு வாரியம் அறிமுகப்படுத்தியுள்ளது. மைசூரிலுள்ள மத்திய பட்டு வாரிய ஆராய்ச்சி நிலையத்தால், இந்த ரகம் கண்டறியப்பட்டுள்ளது.
பட்டுக்கூடுகளின் தரம் உயரும்போது. சுற்றுப்புற சூழ்நிலைகளினால் புழுக்களுக்கு நோய் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.
கோடைக்காலங்களில் அதிக வெப்பத்தால் தட்ப வெப்பநிலைகளை, பரிந்துரைக்கப்பட்ட அளவில் பராமரிக்காவிட்டால், புழு நோய் தொற்றுக்கு ஆளாகி கூடு உற்பத்தி பாதிக்கப்படுகிறது.
இது பட்டு விவசாயிகளின் பொருளாதார வளர்ச்சியை பாதிக்கிறது. எனவே, அதிக வெப்பநிலையினை தாங்கி வளர்ந்து நோய்வாய்ப்படாமல் கூடு அறுவடை செய்யும் வகையில், இந்த இரட்டை கலப்பின ரகம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இரட்டை கலப்பினமான இப்புழுவளர்ப்பு, தென் மாநிலங்களில் சோதனை செய்து பட்டுக்கூடு அறுவடை வாயிலாக, பட்டுக்கூடுகளின் தரம் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
கோடைக்காலத்தில் வெப்ப மாறுதல்களை தாங்கி வளர்ந்து, இப்பட்டுப்புழு இனம் வாயிலாக வெற்றிகரமாக கூடு உற்பத்தி செய்யப்படுகிறது.
புதிய பட்டுப்புழு ரகம், மற்றும் அதன் வாழ்வியல் பற்றி அறிய, மண்டல பட்டு வளர்ப்பு ஆராய்ச்சி மையங்களான சேலம், அனந்தபூர், கொடத்தி மற்றும் சாம்ராஜ்நகர் ஆகிய மையங்களில் ஏப்., ஜூன் 2017ல், 15 முறை புழுவளர்ப்பு செய்து பட்டுக்கூடு அறுவடை செய்து பட்டுக்கூட்டின் தரம் கண்டறியப்பட்டது.
இந்த கலப்பின ரகம், உடுமலையில், மத்திய பட்டு வாரிய அதிகாரிகளால், அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

