தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ தர பரிசோதனை ஆய்வகம் ஏற்றுமதியாளர் வரவேற்பு

 தர பரிசோதனை ஆய்வகம் ஏற்றுமதியாளர் வரவேற்பு

 தர பரிசோதனை ஆய்வகம் ஏற்றுமதியாளர் வரவேற்பு


ADDED : பிப் 19, 2026 05:23 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 19, 2026 05:23 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பூர்: தமிழக இடைக்கால பட்ஜெட்டில், கோவை 'சிட்ரா'வில், மேம்பட்ட தர பரிசோதனை ஆய்வகம் நிறுவ, ஆறு கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளதற்கு, திருப்பூர் ஏற்றுமதியாளர் கள் சங்கம் வரவேற் றுள்ளது.

திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சுப்பிரமணியன் கூறியதாவது:

தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டில், தொழில்துறை வளர்ச்சி, ஏற்றுமதி மேம்பாடு குறித்த திட்டங்கள் இடம்பெற்றுள்ளன. குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறை வளர்ச்சி, உட்கட்டமைப்பு மேம்பாடு, புத்தாக்க தொழில் ஊக்குவிப்பு உள்ளன.

ஜவுளித்துறைக்கு மட்டும், 1,943 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.தொழில்நுட்ப ஜவுளி திட்டம் வாயிலாக பெரிய கட்டமைப்பு ஏற்படுத்தப்படுகிறது.

தொழில்நுட்ப ஜவுளி உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில், கோவை 'சிட்ரா'வில், மேம்பட்ட தர பரிசோதனை ஆய்வகம் நிறுவ, ஆறு கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

மின்மானியம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிதியுதவியால், செலவுகளை குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது. உள்கட்டமைப்பு, திறன் மேம்பாடு மற்றும் சோதனை மேம்பாடுகளால், போட்டித்தன்மை நிறைந்த மைய மாக தமிழகம் மாற்றப்படும்.

புதிதாக 10 கைத்தறி பூங்காக்கள், 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ளன. இதுதவிர, 24 கோடி ரூபாய் மதிப்பீட்டில், கருணாநிதி நுாற்றாண்டு நினைவு கைத்தறி பட்டு பூங்கா நிறுவும் திட்டமும் உள்ளது; இதன் மூலம், 5000 நெசவாளர்கள் வேலை வாய்ப்பை பெறுவர்.

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு தனியே நிதி ஒதுக்கியது, 'சாம்பியன்' திட்டத்துக்கு, 10 ஆயிரம் கோடி ரூபாய், மெட்ரோ ரயில் விரிவாக்கம், கோவையில் ஏற்றுமதி மேம்பாட்டு சூழல் உருவாக்கும் திட்டம் போன்ற திட்டங்களால், தொழில்துறை அதிகபட்ச பயன்களை அடையும்.

இவ்வாறு, அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us